)
Benefits of Fenugreek Seeds: எடை அதிகரிப்பு, உயர் இரத்த சர்க்கரை அல்லது அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நபரா நீங்கள்? அப்படியென்றால் வெந்தயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெந்தய விதை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பது நன்மை பயக்கும்.
சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியதை பல வழிகளில் மேம்படுத்துகிறது. வெந்தய நீர் பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது. இது குறித்த நிபுணரின் கருத்தை அறிந்து கொள்வோம்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
வெந்தயம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்றும் பல வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளை நீக்க உதவுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். வெந்தயத்தை அப்படியே விதைகளாகவும், பொடியாகவும் உட்கொள்ளலாம் என்றாலும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஊற வைத்த நீரை குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகச் சிறந்த வழியாக கருதப்படுகின்றது.
வெந்தய நீரைக் குடிப்பதன் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவு: வெந்தய நீரைக் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதைக் குடிப்பது குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த விதைகளில் கேலக்டோமன்னன் எனப்படும் நார்ச்சத்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எடை இழப்பு: வெந்தய நீரைக் குடிப்பதால் உடல் கொழுப்பைக் குறைக்கிறது. வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்துகிறது, இது எடை குறைக்க உதவுகிறது. இது பசியைத் தடுத்து அதிக கலோரிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கிறது.
கொழுப்பு: வெந்தயத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. அதில் உள்ள நார்ச்சத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோயைத் தவிர்க்கிறது.
செரிமான சக்தியை அதிகரிக்கும்: வெந்தய நீரைக் குடிப்பது செரிமான செயல்முறையையும் பலப்படுத்துகிறது. வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்றை சுத்தம் செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாயுத்தொல்லை, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அனைத்து வயிற்றுப் பிரச்சினைகளையும் வெந்தய நீரைக் குடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.
யூரிக் அமிலம் குறையும்: மூட்டுவலி நோயாளிகளின் உடலில் வலி ஏற்படுவதற்கு யூரிக் அமிலம் அதிகரிப்பதே காரணம். அவர்கள் தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடிக்கலாம்.
வெந்தய நீர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
இதை தயாரிக்க, இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, மீதமுள்ள விதைகளையும் மென்று சாப்பிடுங்கள். இதை கொதிக்க வைத்த பிறகும் குடிக்கலாம்.
வெந்தய நீரை யார் குடிக்கக்கூடாது?
வெந்தய விதை ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், சிலர் இந்த தண்ணீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக வெந்தய நீர் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தீங்கு விளைவிக்கும். இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் வெந்தய நீரைக் குடிக்கக்கூடாது. இரத்தத்தை மெலிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இந்த தண்ணீரைக் குடிக்கக்கூடாது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ