பாகற்காய்: கசப்பாய் இருந்தாலும் சாப்பிடுங்க, இந்த நோய்கள் எதுவும் உங்களை அண்டாது

Health Benefits of Bitter Gourd: பாகற்காய் உட்கொள்வதன் மூலம் சிறந்த செரிமானம், எடை மேலாண்மை, உடல் நச்சு நீக்கம் ஆகியவை உட்பட பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2025, 12:46 PM IST
  • பாகற்காய் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
  • இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமப்படுத்துகிறது.
  • இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் தமனிகளில் பிளேக் சேருவதைத் தடுக்கின்றன.
பாகற்காய்: கசப்பாய் இருந்தாலும் சாப்பிடுங்க, இந்த நோய்கள் எதுவும் உங்களை அண்டாது

Health Benefits of Bitter Gourd: பாகற்காயை பெரும்பாலும் பலருக்கு பிடிக்காது. கசப்பான சுவை கொண்ட பாகற்காய் சாப்பிட விரும்புபவர்கள் மிகச் சிலரே. இது சுவையில் கசப்பாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாகற்காய், நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளின் நல்ல மூலமாகவும் உள்ளது. இது தவிர, இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் சிறந்த செரிமானம், எடை மேலாண்மை, உடல் நச்சு நீக்கம் ஆகியவை உட்பட பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

Add Zee News as a Preferred Source

பாகற்காய் வரலாறு

பாகற்காய் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் வளர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் பின்னர் இது ஆசிய நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டது. இன்றைய காலகட்டதில் பாகற்காய் அதிகபட்சமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சாப்பிடுவதைத் தவிர, பாகற்காய் மருந்துகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில், பாகற்காய் ஒரு இயற்கை மருந்தாக அறியப்படுகிறது. ஆகையால், பல இடங்களில் பாகற்காய் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது.

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை இழப்பு

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், பாகற்காய் எடையை குறைக்க உதவும். இதைச் சாப்பிடுவது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கும். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. பாகற்காய் கலோரிகளை வேகமாக எரிக்கவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சிறந்த செரிமானம்

நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பாகற்காய், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை சாப்பிடுவது மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பாகற்காய் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, கல்லீரலின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துகிறது.

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் பாகற்காய் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். பாகற்காய்களில் காணப்படும் சரண்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி கலவைகள் உடலில் நுழைந்தவுடன் இன்சுலின் போல வேலை செய்யத் தொடங்குகின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், உங்கள் மனமும் கூர்மையாகும்.

இதய ஆரோக்கியம்

பாகற்காய் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமப்படுத்துகிறது. கூடுதலாக, இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் தமனிகளில் பிளேக் சேருவதைத் தடுக்கின்றன. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதய நோய்களையும் தடுக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாதவிடாய்க்குப் பிறகு எந்த நாட்களில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகம்? பாதுகாப்பான நாட்கள் எவை?

மேலும் படிக்க | ஏழைகளின் ஆப்பிள் என்னும் பேரிக்காய்... குறைத்து மதிப்பிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News