எலுமிச்சை: தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் 7 அற்புதமான நன்மைகள்

Health Benefits of Lemon: எலுமிச்சையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் உடலுக்கு 7 அற்புதமான நன்மைகள் கிடைக்கின்றன. எலுமிச்சையின் பயன்பாட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2025, 05:37 PM IST
  • பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.
  • உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • சருமத்திற்கு நன்மை பயக்கும்.
எலுமிச்சை: தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் 7 அற்புதமான நன்மைகள்

Health Benefits of Lemon: எலுமிச்சை நம் சமையலறையில் காணப்படும் ஒரு பொதுவான பழ வகையாகும். உணவுப் பொருட்களின் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை பல பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

எலுமிச்சை சுவையை அதிகரிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நல்லது. எலுமிச்சை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நாம் தினமும் பல வழிகளில் எலுமிச்சையை உட்கொள்ளலாம். எலுமிச்சை நீர் தயாரித்து குடிக்கலாம், எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம், எலுமுச்சை சாறு மற்றும் புதினா இலைகளைக் கொண்டு பானம் தயாரித்து குடிக்கலாம், எலுமிச்சை சாதம், எலுமிச்சை ரசம் செய்யலாம். 

எலுமிச்சையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் உடலுக்கு 7 அற்புதமான நன்மைகள் கிடைக்கின்றன. எலுமிச்சையின் பயன்பாட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தினமும் எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம்

உங்கள் அன்றாட உணவில் எலுமிச்சையைச் சேர்ப்பது இரத்த அழுத்தப் பிரச்சினைகளைப் போக்க உதவும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். தினமும் எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்களை உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 19% குறைவதாக ஒரு ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமத்திற்கு நன்மை பயக்கும்

வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் முக்கியமானது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் அவ்வப்போது நம்மை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லது.

செரிமானம் மேம்படும்

செரிமானத்தை மேம்படுத்த, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும். எலுமிச்சை குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எடை இழப்பு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தண்ணீர் கலந்து குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும்.

சுறுசுறுப்பு

எலுமிச்சை சாறு குடிப்பதால் நாள் முழுதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News