உடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க: ஆயுர்வேதம் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய, இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2025, 05:57 PM IST
  • உடல் பருமன் காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகின்றனர்.
  • சரியான நேரத்தில் எடையை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
  • உடல் எடையை குறைக்க சில எளிய, இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க: ஆயுர்வேதம் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்

Weight Loss Tips: இன்றைய அவசர காலகட்டத்தில் நாம் பல வித வாழ்க்கை முறை நோய்களுக்கு ஆளாகிறோம். இவற்றில் உடல் பருமன் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் குறைவான உடல் செயல்பாடு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

உடல் பருமன் காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆகையால், சரியான நேரத்தில் எடையை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதற்கு பல வழிகள் இருந்தாலும், பக்க விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் நாம், தொப்பை கொழுப்பையும் (Belly Fat) உடல் எடையையும் கட்டுப்படுத்த வேண்டும். உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய, இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

காலையில் இவற்றை சாப்பிடுங்கள்

உடல் எடையை குறைக்க, காலையில் எழுந்தவுடன் முதலில் 1 துண்டு மஞ்சள், 1 துண்டு இஞ்சி மற்றும் சுமார் 8-10 கறிவேப்பிலை இலைகளை மெல்ல வேண்டும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை மெல்லும்போது குந்திய நிலையில் உட்கார வேண்டும். அதன் பின்னர் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இந்த செயல்முறையை நீங்கள் வாரத்தில் 2-3 நாட்கள் பின்பற்றலாம். இப்படி செய்வதன் மூலம் வேகமாக உடல் எடையை குறைக்க முடியும்.

மூலிகை தேநீர்

காலையில் தினமும் மூலிகை தேநீர் குடிப்பது நன்மை பயக்கும். இதை செய்ய, சீந்தில் கொடி, துளசி, இலவங்கப்பட்டை மற்றும் சோம்பு ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைக்க வேண்டும். இதை குடிப்பது நன்மை பயக்கும். இருப்பினும், இதை வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் குடிக்கக்கூடாது. ஒரு நாள் இஞ்சி, மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை சாப்பிட்டுவிட்டு, மற்றொரு நாள் கஷாயம் குடிக்கலாம். 

Breakfast: காலை உணவு

உடல் பருமனைக் குறைக்க, காலை உணவாக உங்கள் எடையில் 10-ல் ஒரு பங்கு பழங்களைச் சாப்பிடுவது நல்லது. அதாவது நீங்கள் 70 கிலோ எடையுள்ளவராக இருந்தால், நிச்சயமாக 700 கிராம் பழங்களைச் சாப்பிட வேண்டும். இதனுடன் வழக்கமாகச் சாப்பிடும் காலை உணவைச் சாப்பிடுங்கள். பழங்கள் சாப்பிட்ட உடனேயே காலை உணவை உட்கொள்ளுங்கள்.

Lunch: மதிய உணவு

மதிய உணவில், உங்கள் எடையில் ஐந்தில் ஒரு பங்கை சாலட்டாக சாப்பிட வேண்டும். இதற்குப் பிறகு, பருப்பு வகைகள், ரொட்டி, அரிசி, காய்கறிகள், தயிர் அல்லது பிற பொருட்களை உட்கொள்ளுங்கள். 

Dinner: இரவு உணவு

இரவு உணவின் போது, ​​முதலில் உங்கள் எடையில் ஐந்தில் ஒரு பங்கை சாலட் அல்லது பழம் கலந்து சாப்பிடுவது நல்லது. பின்னர் ரொட்டி, காய்கறி, சாதம் அல்லது வேறு எதையும் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாலை 6-7 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

உடல் பருமனைக் குறைக்கும் உறுதியான வழி

நீங்கள் எடை இழக்க விரும்பினால், பால், சீஸ், தயிர், இறைச்சி, முட்டை அல்லது பிற விலங்கு பொருட்களை சாப்பிடுவதை குறைக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பேக் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் செய்வது PCOD, அல்சர், அப்பெண்டிக்ஸ், உடல் பருமன், நீரிழிவு நோய், வாயு அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாதவிடாயில் மறந்தும் இந்த விஷயத்தைச் செய்யாதீர்கள்..குறிப்பாக இந்த ஒன்று!

மேலும் படிக்க | இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News