உச்சி முதல் பாதம் வரை... பச்சை பப்பாளி ஜூஸ் கொடுக்கும் அற்புத நன்மைகள்

Health Benefits of Raw Papaya Juice: பொதுவாக பப்பாளி பழத்தை போல பப்பாளி பழச்சாறும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. ஆனால் பச்சை பப்பாளியையும் சாறாக அரைத்து உட்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 5, 2025, 07:41 AM IST
  • பச்சை பப்பாளியில் கலோரிகளின் அளவு குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
  • இது எடை இழப்புக்கு உதவுகிறது.
  • இந்த சாறு பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும்.
உச்சி முதல் பாதம் வரை... பச்சை பப்பாளி ஜூஸ் கொடுக்கும் அற்புத நன்மைகள்

Health Benefits of Raw Papaya Juice: பப்பாளி பழம் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு சத்தான பழம். இதை பலரும் விரும்பி உட்கொகிறார்கள். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். ஆனால், பப்பாளி பழம் போல் பச்சை பப்பாளியும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பது பலருக்குத் தெரியாது. 

Add Zee News as a Preferred Source

பச்சை பப்பாளி

பப்பாளி பச்சையாக, அதாவது காய் வாட்டாக இருக்கும்போது, ​​அது ஒரு காயாகக் கருதப்படுகிறது. பழுத்த பப்பாளி பழமாக உட்கொள்ளப்படுகின்றது. இந்தியாவின் சில பகுதிகளில், பச்சை பப்பாளியை கறியாக சமைத்தும் உட்கொள்கிறோம். இது சுவையானதாக இருப்பதொடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஆசிய நாடுகளிலும் பச்சை பப்பாளிக்கு அதிக தேவை உள்ளது. 

பொதுவாக பப்பாளி பழத்தை போல பப்பாளி பழச்சாறும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. ஆனால் பச்சை பப்பாளியையும் சாறாக அரைத்து உட்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பச்சை பப்பாளி சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பச்சை பப்பாளி சாற்றை ஏன் குடிக்க வேண்டும்? இதில் உள்ள பிரத்யேக நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பச்சை பப்பாளி சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Immunity: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பச்சை பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை வராமல் தடுக்க பச்சை பப்பாளி சாறு மிக நல்லதாக கருதப்படுகின்றது.

Digestion: செரிமானத்தை மேம்படுத்தும்

பச்சை பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. பச்சை பப்பாளி சாறு, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற அனைத்து வயிற்றுப் பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது.

Skin are: சருமத்திற்கு நன்மை பயக்கும்

பச்சை பப்பாளி சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சருமத்திற்கு ஈரப்பதத்யை அளித்து சரும பாதுகாப்பில் உதவுகின்றன.

Weight Loss: எடை இழப்பில் உதவும்

பச்சை பப்பாளியில் கலோரிகளின் அளவு குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. இந்த சாறு பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.

Heart Care: இதய ஆரோக்கியம்

பச்சை பப்பாளி கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கும். பச்சை பப்பாளி சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் டேஞ்சர் உணவுகள்: அலர்டா இருங்க மக்களே!

மேலும் படிக்க | பப்பாளி விதைகளை இனி தூக்கி போடாதீங்க: ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்.... லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News