வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
Vitamin B12 Foods: வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
Vitamin B12 Foods: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து என பல விதமான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின்கள் உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கின்றன. வைட்டமின் பி12 மிகவும் தேவையான ஒரு வைட்டமினாக உள்ளது. இதன் குறைபாடு ஏற்பட்டால், உங்கள் உடல் கடுமையான நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும். வைட்டமின் பி 12 -இன் குறைபாடு இரும்புச்சத்தின் உறிஞ்சுதலையும் குறைக்கிறது. இதனால் சோர்வு, பலவீனம், தசைவலி, எலும்பு வலி, முடி உதிர்தல் மற்றும் தோல் நிறம் மஞ்சள் நிறமாக மாறுதல் ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் பி-12 குறைபாட்டைப் போக்க, சைவ உணவு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் பி-12 நிறைந்த உணவுகளான 5 பச்சை உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் பி-12 நிறைந்த 5 சைவ உணவுகள்
1. கீரை (Palak)
பாலக் கீரை சாப்பிடுவதால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு சரியாகும். பாலக் கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளன. இந்த பச்சை இலை காய்கறி ஃபோலேட்டின் மூலமாக உள்ளது. மேலும் அதில் பொட்டாசியமும் காணப்படுகிறது. தினமும் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி12 குறைபாடு குணமாகும்.
2. ப்ரோக்கோலி (Broccoli)
பச்சை காய்கறியான ப்ரோக்கோலி வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்களும் உள்ளன. வைட்டமின் பி-12 குறைபாட்டை ப்ரோக்கோலி சாப்பிட்டு சில நாட்களில் குணப்படுத்தலாம்.
மேலும் படிக்க | வெள்ளை கலரு காய் சாப்பிட்டால் புற்றுநோய், வைரஸ் எல்லாம் உங்களை எப்போதும் தீண்டாது..!
3. அவகேடோ (Avocado)
அவகேடோ சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின் பி12 கிடைக்கிறது. அவகேடோவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவகேடோ பழத்தை காலை உணவாக சாப்பிடலாம். இதை தினமும் உட்கொள்வது வைட்டமின் பி12 குறைபாடு மற்றும் வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தும். அவகேடோ குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
4. பயத்தம் பருப்பு (Green Gram)
வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்க, பயத்தம் பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பயத்தம் பருப்பு கஞ்சியை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வைட்டமின் பி-12 குறைபாடு நீங்கும். வைட்டமின் பி12 குறைபாட்டை உடனடியாகப் போக்க வேண்டுமானால், அவ்வப்போது பச்சை பயறை உட்கொள்வது நல்லது.
5. கடுகு கீரை (Mustard)
கடுகு கீரை வைட்டமின் பி-12 இன் சிறந்த மூலமாகும். குளிர்காலத்தில் இதை உட்கொளவ்யு மிக நல்லது. வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் கடுகு கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ