மூளை - நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்வுகளும்

Vitamin B12 Deficiency: மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிக அவசியம். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ உருவாக்கம் ஆகிய முக்கிய பணிகளையும் மேற்கொள்ளும் இந்த சத்து குறைவது, மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2025, 03:07 PM IST
  • வைட்டமின் பி12 குறைபாட்டினால் உண்டாகும் மூளை பாதிப்பு
  • வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்.
  • வைட்டமின் பி12 குறைபாட்டின் சில எச்சரிக்கை அறிகுறிகள்.
மூளை - நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்வுகளும்

சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, உங்கள் மூளை மற்றும் மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிடுதல் அல்லது எதையும் நினைவில் கொள்ள முடியாமல் போதல், பெயர்கள் வார்த்தைகள் மறந்து போதல், நரம்பு தளர்ச்சி போன்ற அறிகுறிகள், மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

Add Zee News as a Preferred Source

வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் (Importance of Vitamin B12)

வைட்டமின் பி12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களின் ஒன்று. மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இது மிக அவசியம். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ உருவாக்கம் ஆகிய முக்கிய பணிகளையும் மேற்கொள்ளும் வைட்டமின் பி12 சத்து குறைவது, மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். டிஎன்ஏ சேதமடைவதோடு, உடலில் இரத்தம் சிவப்பணுக்கும் குறையும். மேலும், வைட்டமின் பி12 குறைபாடு எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது,

வைட்டமின் பி12 குறைபாட்டினால் உண்டாகும் மூளை பாதிப்பு (Vitamin B12 Deficiency Affects Brain)

வைட்டமின் பி12 குறைபாடு மூளை செயல்திறனை வெகுவாக பாதிப்பதோடு, உங்கள் நினைவாற்றலை மோசமாகப் பாதிக்கும். இந்த வைட்டமின் குறைபாட்டால், மறதி நோய் ஏற்படும் அபாயம் பெருமளவில் அதிகரிக்கலாம். உங்கள் மூளை ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்க விரும்பினால், வைட்டமின் பி12 குறைபாடு (Health Tips) ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வைட்டமின் பி12 குறைபாட்டின் சில எச்சரிக்கை அறிகுறிகள் (Vitamin B12 Symptoms)

நினைவாற்றல் குறைபாடு, கவனம் செலுத்த இயலாமை அல்லது மறதி போன்ற அறிகுறிகளைத் தவிர, சோர்வு, பலவீனம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றங்கள், சருமம் வெளிறி மஞ்சள் நிறமாக தோன்றுதல் போன்ற அறிகுறிகளும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசித்து, அவர்கள் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொள்ளுங்கள். 

வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்க உதவும் சில உணவுகள் (Foods To Cure Vitamin B12 Deficiency)

வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க, சோயாபீன் அல்லது சோயா உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், காளான்கள், மீன் உணவுகள் குறிப்பாக சால்மன், டுனா, ட்ரவுட் போன்ற மீன்கள், இறைச்சி, சிக்கன், முட்டையின் மஞ்சள் கரு போன்ற அதிக அளவில் வைட்டமின் பி12 உள்ள உணவுகள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இளமையை காக்கும் கொலாஜன் என்னும் புரதம்... உடலில் குறையாமல் இருக்க செய்ய வேண்டியவை

மேலும் படிக்க | 145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News