Vitamin B12 Deficiency: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிக அவசியமாகும். ஆனால், இந்த வைட்டமினை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. ஆகையால், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, கோபாலமின் நிறைந்த உணவுகள் தேவைப்படுகின்றன. வைட்டமின் பி12 அல்லது கோபாலமின் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்தாக உள்ளது. வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி12 குறைபாடு
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், தீவிர சோர்வு அல்லது பலவீனம், சுவாசிப்பதில் சிரமம், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், நாக்கில் வலி அல்லது வீக்கம், எடை இழப்பு, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை, பசியின்மை, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஒரு நடுத்தர வயது நபருக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்வது எப்படி? இதற்கு எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள், தங்கள் உணவில் 5 மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதை சரி செய்யலாம். அதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்ணுங்கள்
செறிவூட்டப்பட்ட உணவுகள் வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாகும். தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், செறிவூட்டப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு, அவற்றை உட்கொள்ளாதவர்களை விட சிறந்த B12 அளவுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவை போதுமான வைட்டமின் பி12 ஐ வழங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த லேபிள்களை கவனமாகப் படிப்பது நல்லது.
புளித்த உணவுகளை உண்ணுங்கள்
பனீர், தோசை மற்றும் இட்லி போன்ற புளித்த உணவுகளும் உங்கள் வைட்டமின் பி12 உட்கொள்ளலுக்கு பங்களிக்கும். ஏனெனில் இந்த உணவுகள் பாக்டீரியாவை உள்ளடக்கிய ஒரு செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகின்றன.. அவற்றில் சில வைட்டமின் பி12 ஐ உற்பத்தி செய்யலாம்.
வைட்டமின் பி12 அசைவ உணவுகள்:
விலங்குகள் சார்ந்த உணவுகளை உண்ணுங்கள்
கோழி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் வைட்டமின் பி12 இன் போதுமான அளவை பராமரிக்க உதவும்.
உறுப்பு இறைச்சிகளை உண்ணுங்கள்
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளில் வைட்டமின் பி12 குறிப்பாக நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குறிப்பாக குறைபாடுள்ள நபர்களுக்கு, பி12 உட்கொள்ளலை அதிகரிப்பதற்கு, உறுப்பு இறைச்சிகளை உட்கொள்வது ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ளும்போது இதை மனதில் கொள்ளவும்
கடுமையான வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், உணவுமுறை மூலம் மட்டும் அதன் கடுமையான அறிகுறிகளைத் தடுப்பது கடினம். இந்தப் பிரச்சினை பெரும்பாலும் வயதானவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகிறது. எனினும், மருத்துவரை அணுகாமல் ஒருபோதும் சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ள வேண்டாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகப்படியான வைட்டமின்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதயம் அடிக்கடி வேகமாக துடிக்கிறதா? மருத்துவ காரணங்கள் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









