எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

Vitamin D Deficiency: இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 5, 2025, 10:41 AM IST
  • நம் உடலுக்கு பல வகையான வைட்டமின்களில்,
  • வைட்டமின் டி ஊட்டச்சத்தும் அடங்கும்.
  • வைட்டமின் டி சிக்கலான வைட்டமின்களில் ஒன்றாகும்.
எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்க செய்து, முதுகுவலி, மூட்டு வலி, உடல் வலி, ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பல தீவிரமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

Add Zee News as a Preferred Source

வைட்டமின் - டி குறைபாடு

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து வகையான வைட்டமின்களும் தேவை. வைட்டமின்கள் பி - 12, பி - 6, சி மற்றும் டி ஆகியவையும் இதில் அடங்கும். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன் பற்றாக்குறை இருந்தால்,  நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இந்த வைட்டமின் செல் வளர்ச்சி மற்றும் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு போன்ற உடலின் பல செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் குறைபாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் கூறும் ஆலோசனைகளை (Health Tips) தெரிந்துகொள்வோம்.

நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

மருத்துவர் தன்வி மயூர் படேல் வைட்டமின் டி குறைபாடு குறித்து கூறுகையில், 'வைட்டமின் டி' குறைபாடு நீரிழிவு நோயாளிகளிடமும் காணப்படுகிறது. தைராய்டு நோயிலும் வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு உள்ளது. இந்த வைட்டமின் பல நோய்களுக்கும் காரணமாகிறது. உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள்

1. சூரிய ஒளிக்கு குறைவான வெளிப்பாடு.

2. உணவில் போதுமான வைட்டமின் டி நிறைந்த உணவுகள் இல்லாத நிலை.
.
3. வயோதிகம் காரணமாக  வைட்டமின் குறைபாடு ஏற்படலாம்.

4. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதும் உடலில் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

5. கர்ப்பிணிப் பெண்களும் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

வைட்டமின் டி குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்

எலும்புகளில் வலி மற்றும் பலவீனம்.

தசைகளில் பலவீனம் அல்லது வலி.

அதீத் சோர்வு மற்றும் மந்த நிலை.

அடிக்கடி எலும்பு முறிவுகள்.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி.

மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள். ஏனெனில், வைட்டமின் டி குறைபாடு மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.

வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க செய்ய வேண்டியவை

தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் செலவிட வேண்டும். தினமும் 10 - 20 நிமிடங்கள், குறிப்பாக காலை அல்லது மாலை சூரிய ஒளியில் இருக்க வேண்டும். 

உங்கள் உணவில் பால் பொருட்களை அதிகம் சேர்க்கவும்.

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த மீன்களை உண்ண வேண்டும்.

முட்டை சாப்பிடலாம்.

உடலில் கடுமையான வைட்டமின் குறைபாடு இருந்தால், மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பப்பாளி விதைகளை இனி தூக்கி போடாதீங்க: ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்.... லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | உங்கள் நாளை சீரக தண்ணீருடன் தொடங்குங்கள்.. இந்த பிரச்சனை எல்லாம் வராது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News