இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதால், பல விதமான நோய்கள் தாக்குகின்றன. ஆனால் நம் வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களைச் செய்தால், பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.
நடைபயிற்சி முக்கியத்துவம்
தினமும் இல்லை என்றாலும், வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சியின் மூலம் பி.பி, சர்க்கரை நோய் மட்டுமின்றி புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் தவிர்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க
கிரேட்டர் நொய்டா வெஸ்டில் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். சின்மயி அகர்வால், உடல் ஆரோக்கியம் குறித்து குறிப்பிடுகையில், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், நீரிழிவு, பிபி மற்றும் உடல் பருமன் மட்டுமல்ல, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிறார்.
உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க வேண்டும்
வாழ்க்கை மிகவும் பரபரப்பாகத் தான் உள்ளது. ஆனால் நாம் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். நாம் நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஜாகிங் அல்லது யோகா என உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
நடைபயிற்சியும் புற்றுநோயும்
மார்பக புற்றுநோய்: தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை 30% குறைக்கிறது.
பெருங்குடல் புற்றுநோய்: உடல் செயல்பாடு குடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது பெருங்குடல் புற்றுநோயின் வாய்ப்புகளை குறைக்கிறது.
புரோஸ்டேட் புற்றுநோய்: வழக்கமான நடைப்பயிற்சி மூலம் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து பெருமளவில் குறைக்கப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி புற்றுநோய் செல்கள் ஆபத்தை குறைக்கிறது.
நிபுணர்கள் கூறும் கருத்து
'வாழ்க்கையில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து எப்படி தங்களைக் காத்துக் கொள்ள முடியும்' என விளக்குகிறார் டாக்டர் சின்மயி. அவர் கூறுகையில், ' உடல்பயிற்சியுடன் உணவில் வண்ணமயமான உணவுகளையும் சேர்த்துக்கொண்டால், பல வகையான நாள்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம். ஒரு 30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உயிரை புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்து காப்பாற்றும் என்று டாக்டர் சின்மயி அகர்வால் நம்புகிறார். இதனுடன், சீரான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை வெல்லலாம்.
நடைபயிற்சி புற்றுநோயின் அபாயத்தை குறைக்குமா?
உடல் எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும். BMI என்னும் உடல் நிறை குறியீட்டை சமநிலையில் பராமரிக்க, தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்கிறார் மருத்துவர்.
நடைபயிற்சி ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது
தினசரி நடைப்பயிற்சி உடலில் இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கிறது. இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
உடல் இரத்த ஓட்டம் மேம்படுகிறது
நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக போதுமான அளவு ஆக்ஸிஜன் உடலில் பராமரிக்கப்படுகிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு வலுவடைய உதவும் நடைபயிற்சி
நடைபயிற்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இது நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை அதிகரிக்கிறது.
டாக்டர் அகர்வால் கூறுகையில், இன்றைய காலத்தில் மக்கள் துரித உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பஜ்ஜி, போண்டா, சமோசா, துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து, நம் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகளை சேர்த்துக் கொண்டால் வண்ணமயமான மற்றும் சமச்சீர் உணவு பல நோய்களில் இருந்து நம்மை காக்கும் என்கிறார் மருத்துவர்.
புற்றுநோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை
சரிவிகித உணவை உண்ணுங்கள்: பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் புதிய பழங்கள் சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்: புகையிலை மற்றும் ஆல்கஹால் ஆகியவை புற்றுநோய்க்கான மிகப்பெரிய காரணங்கள், எனவே அவற்றிலிருந்து விலகி இருங்கள்.
போதுமான தூக்கம் அவசியம்: தினமும் 7-8 மணிநேர தூக்கம் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க: மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது, இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. வழக்கமான யோகா மற்றும் தியானம் நல்ல பலன் தரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









