உடல் எடை அதிகமாக இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு அதிக உடல் எடை வழிவகுக்கிறது. எனவே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உடற்பயிற்சிகள் தேவை.
நம்மில் பலர் உடல் எடையை விரைவாக குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். இதற்கு நேரம் மற்றும் வாய்ப்பு இல்லாதவர்கள் நடைபயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றை பின்பற்றுகின்றனர். நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான சிறந்த வழிகள் என்றாலும், இவை இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கலோரி எரிப்பு
உடல் எடையை குறைப்பதில் கலோரிகளை எரிப்பது முக்கியமாகிறது. நடைபயிற்சி மேற்கொண்டாலும் சரி, சைக்கிளிங் மேற்கொண்டாலும் சரி, இரண்டுமே அதன் பயிற்சியின் தீவிரத்தை பொறுத்து அமைகிறது. கலோரியை எரித்தல் குறித்த ஒரு மாதிரி அட்டவணையை இங்கு பார்க்கலாம்.
- 70 கிலோ உள்ள ஒருவர் நடைபயிற்சி (5 கிலோ மீட்டர்): ஒரு மணி நேரத்திற்கு 300 கலோரிகள் குறையும்.
- அதுவே மிதமான வேகத்தில் ஒருவர் 20 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டினால், மணிக்கு 600-700 கலோரிகள் குறையும்.
மேலே குறிப்பிட்டதை வைத்து பார்க்கையில் நடைபயிற்சியை விட சைக்கிளிங் அதிக கலோரிகளை எரிக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த முடிவு ஒருவருடைய எடை மற்றும் உயரத்திற்கு எற்றார் போல மாறும்.
மேலும் படிங்க: தினசரி நடப்பதால் இரத்த சக்கரை அளவு குறையுமா? மருத்துவர்கள் அறிவுரை!
தசை ஈடுபாடு மற்றும் வலிமை
நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவது என இரண்டுமே இடுப்பு தசை மற்றும் தொடை தசை ஆகியவற்றின் இயக்கம் அதிகமாக இருக்கும். நடைபயிற்சிய ஒப்பிடும்போது சைக்கிள் ஓட்டுதல் கால்களில் உள்ள தசைகளை அதிக உருவாக்குகிறது. மேலும், தசைகள் கொழுப்பை விட ஓய்வில் ஓய்வில் அதிக கலோரிகளை எரிப்பதால், சைக்கிள் ஓட்டுபவர்கள் காலப்போக்கில் வளர்சிதை மாற்றத்தில் சிறிது அதிகரிப்பை அனுபவிக்கலாம்.
எடையை குறைக்க சிறந்தது எது?
நீங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என விரும்பினால், நடைபயிற்சியை விட சைக்கிள் ஓட்டுதல் சிறந்ததாக அமைகிறது. ஏன்னென்றால் சைக்கிளிங் செய்வது நமது வளர்சிதை மாற்றத்தை மிக வேகமாக தூண்டுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தினமும் நடைபயிற்சி செய்யக்கூடிய சிலரும், தினமும் சைக்கிளிங் செய்யக்கூடிய சிலரும் கலந்து கொண்டனராம். அதில், ஒரு குறிப்பிட்ட கால அளவில் நடைபயிற்சி செய்தவர்களை விட சைக்கிளிங் செய்தவர்களின் எடை அதிகமாக குறைந்திருந்ததாக தெரிகிறது.
மொத்தத்தில் கலோரிகளை எரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் நடைபயிற்சியை விட சைக்கிள் ஓட்டுவதே சிறந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் சைக்கிள் ஓட்ட சிரமப்படும் வயதானவர்கள் தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் அவர்களால் உடை எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிங்க: உடலுறவின் போது 2 காண்டம் போடுவது... ரொம்ப நல்லதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ