உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்ட நிலையில், சில உத்திகள் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும்.
உடல் பருமனை குறைக்க உதவும் சிறந்த டயட்டில் ஒன்று தான் 30-30-30 பார்முலா. அதைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
30-30-30 ஃபார்முலா என்பது, காலையில் விழித்தவுடன் முற்பது நிமிடங்களுக்குள் 30 கிராம் புரோட்டின் உணவை எடுத்துக்கொண்டு 30 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி செய்வதாகும்.
30-30-30 பார்முலாவின் முக்கிய நோக்கம், மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்பை எரிக்கும் உடலின் திறனை மேம்படுத்துவதாகும்.
புரதச்சத்துடன் காலை உணவை தொடங்குவதும், உடற்பயிற்சி செய்வதும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை எரிக்கும்.
எனினும் இந்த ஃபார்முலா எல்லோருக்கும் சிறப்பாக வேலை செய்யும் என்று கூற முடியாது.
உடல் எடை குறைப்பதற்கான இந்த பார்முலா, சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
ஊட்டச்சத்துக் குறைபாடு, இரத்த சர்க்கரை அளவு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே மருத்துவ ஆலோசனை இல்லாமல், இந்த டயட் முறையை பின்பற்றுவது உசிதமல்ல.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.