கார்பனேட்டட் பானங்களில் சத்துக்கள் என்பது மருந்துக்கும் கூட இல்லை. சோடா பானங்களில் இருப்பது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சர்க்கரை மட்டுமே.
சோடா பானங்களில் சேர்க்கப்படும் சோடியம் பென்சோயிட் என்னும் இரசாயனம் குழந்தைகளின் நினைவாற்றலை பாதித்து கவன சிதறலை ஏற்படுத்துகிறது.
சோடா பானங்களில் உள்ள ராசாயனங்கள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்கின்றன.
சோடா பானங்களில் சர்க்கரை மிக அதிக அளவில் இருப்பதால் அவை உடல் பருமன், டைப் 2 வகை நீரிழிவு, தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன
சோடா பானங்கள் உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் மூட்டு வலிகள் ஏற்பட காரணமாகிறது.
சோடா பானங்கள் உள்ள சர்க்கரை மற்றும் அமிலம் பற்களின் எனாமலை பாதித்து, பற்களை சொத்தையாக்குகின்றன.
சோடா பானங்களில் கேஃபைன் அதிகம் இருப்பதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.