ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.
ஊமத்தை காரத்தன்மையும், கசப்பு சுவையும் கொண்ட தாவரம். நச்சு முட்கள் நிறைந்த இந்த இலைகள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட கீல்வாயு குணமாகும். கரு ஊமத்தை இலை மூட்டு வலி முதல் ஆண்களின் உடல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில், சம அளவு ஊமத்தை இலைச்சாற்றைச் சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைத்து, புண்கள் மீது தடவி வந்தால், விரைவில் குணமாகும்.
ஊமத்தை இலை அல்லது பூவை உலர்த்தி சுருட்டு போல் செய்து, பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து வெளியில் விட்டால் காச நோய் கட்டுக்குள் வரும்.
ஊமத்தை இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விட சீதளத்தால் வந்த காது வலி தீரும்.
ஊமத்தை இலையை பயன்படுத்தினால் உச்சந்தலையில் முடி உதிர்வதை தடுக்கலாம். வழுக்கை பிரச்சனை நீங்கும். முடி உதிர்தலுக்கு உதவியாக இருக்கும்
காதில் வலி இருந்தால், கரு ஊமத்தை இலை உங்கள் பிரச்சனையை நீக்கும். உண்மையில், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் காதுவலி பிரச்சனையை குறைக்கும்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது