அழகான, கருமையான கூந்தல் வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது.
இன்று பெரும்பாலானோர் கூந்தல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர்.
அதிகப்படியான முடி உதிர்தல், இளநரை பிரச்சனை, பொடுகு பிரச்சனை போன்றவை இன்று சகஜமாகி வருகின்றன.
பல வித இயற்கையான பொருட்களின் மூலம் நாம் நமது கூந்தலை நன்றாக பராமரிக்க முடியும்.
கூந்தலுக்கு நெல்லிக்காய் தரவல்ல நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காய் கூந்தலுக்கு ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தல் வேகமாக வளரும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளன. இது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, முழுமையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
முடி விரைவில் நீளமாக வளர, நெல்லிக்காய் எண்ணெய் தடவவும். இந்த எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்தால் பொடுகும் நீங்கும்.
உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், கண்டிப்பாக நெல்லிக்காயைப் பயன்படுத்துங்கள். வைட்டமின் சி கொலாஜன் உருவாவதை அதிகரிக்கிறது, இது முடி செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
நெல்லிக்காயில் உள்ள டானின் அம்சம் சூரிய ஒளியில் இருந்து கூந்தலை பாதுகாக்கும்.