பழங்கள் பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சில குறிப்பிட்ட பழங்களை தவறாமல் சேர்த்துக் கொள்வதால், முதுமையை விரட்டி அடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏராளமான நீர் சத்து கொண்ட பனிப்பழத்தில், விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி, இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம், சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் மாசு மருக்களை நீக்கும் அருமருந்து.
அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமோலைன் என்ற நொதி, இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் உருவாக உதவுகிறது.
மாங்கனி கொலாஜனை உற்பத்தி செய்ய உதவும் என்பதால், இது சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.