நெல்லிக்காய்யில் வைட்டமின் சி உள்ளது. அவற்றை அப்படியே கடித்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.
ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன. ஆப்பிள் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. அவற்றை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும்.
கிவி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அவற்றை தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லது.
பிளம்ஸ் பழத்தை சிலர் தோல் நீக்கி சாப்பிடுகின்றனர். ஆனால் அவற்றின் தோல்களில் அதிக சத்து உள்ளது. எனவே தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும்.
செர்ரி பழத்தின் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. அவற்றை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும்.
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி அதிகமானோர் சாப்பிடுகின்றனர். அவற்றின் தோலில் நிறைய சத்து இருப்பதால் அப்படியே சாப்பிடுவது நல்லது.
பேரிக்காய்யில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவற்றை செரிமானத்தை அதிகப்படுகிறது. அவற்றை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும்.
சப்போட்டாவில் வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைந்துள்ளது. சப்போட்டாவை நன்கு கழுவி தோலுடன் சாப்பிட வேண்டும்.