பால் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடக்கிய முழுமையான உணவு என்றாலும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது பாதகமான பலனை தரும்.
உணவில் எலுமிச்சம் பழமும் பாலும் சேர்ந்தால், சரும நோய் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்
முள்ளங்கி மற்றும் பாலை ஒன்றாக உணவில் சேர்க்கும் போது வயிற்று வலி, எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
இறைச்சி உணவுகளுடன் பால் சேரும்போது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டும் குணங்களைக் கொண்டது.
புளிப்பு சுவை நிறைந்த சிட்ரஸ் பழங்கள் பாலுடன் சேரும்போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
பாலையும் தர்பூசணியையும் ஒன்றாக சாப்பிடும் போது வாந்தி பேதி தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
தயிரையும் பாலையும் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
உளுந்து சேர்த்த உணவுகளை உண்ட பிறகு பாலை குடிப்பது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)