கருப்பு திராட்சையில் வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.
திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.
கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.
கருப்பு திராட்டையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன.
கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.
கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன.