எகிறும் சுகர் லெவலை தட்டி வைக்கும் சிறந்த காலை உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சில சிறந்த காலை உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

காய்கறி சாலட்

ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை கொண்ட சாலட்டை காலை உணவில் உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

உலர் பழங்கள்

காலையில் அக்ரூட், பாதாம் போன்ற உலர் பழங்களை உட்கொள்வதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

ருப்பு வகைகள்

பயத்தம் பருப்பு, ராஜ்மா, கொண்டைக்கடலை, காராமணி போன்ற பருப்புகள் இரத்த சர்க்கரையின் திடீர் அதிகரிப்பை தடுத்து உடலுக்கு தேவையான புரதச்சத்தையும் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

பார்லி

இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பார்லி உதவும். காலை வேளையில் சுகர் லெவலில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை இது தடுக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

ஓட்ஸ்

ஓட்சில் அதிக அளவு பீட்டா-குளுக்கன் உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு என்பதால் இதை நீரிழிவு நோயாளிகள் காலையில் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 01, 2024

VIEW ALL

Read Next Story