ஆட்டம் காட்டும் யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் சூப்பர் உணவுகள்

';

யூரிக் அமிலம்

இயற்கையான வழியில் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

';

வாழைப்பழம்

குறைந்த பியூரின் அளவுள்ள வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது.

';

பால், தயிர்

உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவைக் குறைக்க, குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் சாப்பிடலாம். இவை உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகின்றன.

';

காபி

பலருக்கு விருப்பமான காபி யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் உதவும். காபி உடலில் உள்ள பியூரின்களை உடைக்கும் என்சைம்களை பாதிக்கிறது. இதன் காரணமாக, யூரிக் அமிலம் உருவாகும் விகிதம் குறைகிறது.

';

பழங்கள்

எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், பப்பாளி, அன்னாசி போன்ற புளிப்பு மற்றும் துவர்ப்பு நிறைந்த பழங்களை உட்கொண்டால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தலாம். இவை இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் குறைக்கின்றன.

';

நார்ச்சத்து நிறைந்த பழங்கள்

ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, புளுபெர்ரி, கேரட், வெள்ளரி போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்கள் யூரிக் அமிலத்தை குறைத்து மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

';

செர்ரி

செர்ரிகளில் உள்ள ஆரோக்கிய பண்புகள் அதிக யூரிக் அமிலத்தின் விளைவுகளை குறைக்கின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள இவற்றை உட்கொள்வதால் செரிமானமும் மேம்படும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story