வேகமா எடை குறைய உதவும் மேஜிக் மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க

Sripriya Sambathkumar
Nov 05,2024
';

தொப்பை கொழுப்பு

தொப்பை கொழுப்பும் உடல் பருமனும் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனைகளாக உள்ளன.

';

எடை இழப்பு

எடை இழப்பில் உதவி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில சக்திவாய்ந்த மூலிகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சீரகம்

செரிமானத்தை சீர் செய்யும் சீரகம், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தி உடல் பருமனை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் உள்ள பண்புகள் அதிக பசியை குறைத்து எடை இழப்பில் உதவுவதோடு இரத்த சர்க்கரை அளசையும் குறைக்க உதவுகின்றன.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தனிமம் எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இடுப்பு மற்றும் தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகின்றன.

';

இஞ்சி

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை சீர் செய்யவும், வீக்கம் மற்றும் உப்பசத்தை குறைக்கவும், உதவுகின்றன. வேகமாக உடல் எடையை குறைக்க தினமும் இரவில் இஞ்சி தண்ணீர் குடிக்கலாம்.

';

வெந்தயம்

தினமும் வெந்தய தேநீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் மேம்பட்டு, செரிமானம் சீராகி, தொப்பை கொழுப்பு (Belly Fat) வேகமாக குறையும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story