நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இரவு தூங்கும் முன் பின்பற்ற வேண்டிய சில எளிய டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் காணலாம்,
நீரிழிவு நோயாளிகள் இரவில் குறைந்தபட்ச 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரவு உணவில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து, இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இரவு உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி கிடைக்கும்.
இரவு தூங்கும் முன் தியானம் அல்லது சுவாச பயிற்சிகளை மெற்கொவது மிக நல்லது. இதனால் மன அழுத்தம் குறைவதுடன் நல்ல உறக்கமும் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தூங்கும் முன் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்வது நல்ல பழக்கமாகும். இதன் மூலம் இதன் கட்டுப்பாட்டில் உதவி கிடைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.