பொதுவாக வேர் காய்கறிகள் அனைத்தும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை
வைட்டமின் ஏ சி மற்றும் பி6, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு மூளையை சுறுசுறுப்பாக வைக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.
இரும்புச் சத்து, மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்த பீட்ரூட், துமத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை.
வைட்டமின்கள் சி, ஏ, கே நார்ச்சத்து கால்சியம் நிறைந்த நூல்கோல், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை தூண்டுகிறது.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் கண்பார்வை திறனை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முள்ளங்கிகள், மெட்டபாலிசத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.