இன்றைய போட்டி மிகுந்த உலகில், நமது மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் தான் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும்.
கூர்மையான மூளையையும், நினைவாற்றலையும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் கொண்ட சில விதைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நினைவாற்றலை அள்ளிக் கொடுத்து, புத்தி கூர்மைக்கு உதவும் சூரியகாந்தி விதைகள் டயட்டில் கண்டிப்பாக இருக்கட்டும்.
மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த பூசணி விதைகள், மூளையை கூர்மையாக்கும் ஆற்றல் கொண்டவை.
அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் ஆற்றலை பெற்ற ஆளி விதைகளை, வாரத்திற்கு இருமுறையேனும் சேர்த்துக் கொள்ளவும்.
உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு, மூளைக்கும் ஆற்றலை வழங்கி சுறுசுறுப்பாக வைக்கும் ஆற்றல் கொண்டவை சியா விதைகள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதைகளில், ஏதேனும் ஒன்றை தினசரி சிறிதளவு எடுத்துக்கொண்டு வருவதால், புத்தி கூர்மை சிறப்பாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.