இட்லி நாம் தினசரி சாப்பிட கூடிய ஒரு உணவு ஆகும். தென்னிந்தியாவில் முக்கிய காலை உணவாக உள்ளது.
அரிசி மூலம் தயாரிக்கப்படும் இட்லி எளிதில் ஜீரணமாகிறது. இதனால் பலரும் இதனை விரும்புகின்றனர்.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
இட்லியில் உள்ள வெள்ளை அரிசி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இட்லியின் மூலப்பொருட்கள் அரிசி மற்றும் பருப்பு ஆகும். இவை இரண்டிலும் அதிக மாவுச்சத்து உள்ளது.
இவை இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை அதிகப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், வெள்ளை அரிசிக்கு பதில் ராகி, தினை போன்றவற்றை சேர்த்து இட்லி சமைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)