எலும்பு புற்றுநோய் 4 வகைப்படும்: ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2, ஸ்டேஜ் 3 மற்றும் ஸ்டேஜ் 4
எலும்பு புற்றுநோயின் முதல் ஸ்டேஜில் ட்யூமரின் அளவு 8 செமீ அல்லது அதை விட சிறிதாகவோ / பெரிதாகவோ இருக்கும்.
இந்த ஸ்டேஜில் கேன்சர் இருக்கும் இடத்திலேயே இருக்கும், பெரும்பாலும் இந்த கட்டத்தில் அது பரவாது.
எலும்பு புற்றுநோயின் இரண்டாவது ஸ்டேஜிலும் கட்டிகள் 8 செமீ அளவில் தான் பெரும்பாலும் இருக்கும்.
இந்த ஸ்டேஜில் கேன்சர் செல்கள் வேகமாக பரவும்.
கேன்சர் 3 ஆவது ஸ்டேஜில் இருந்தால், ட்யூமர் இரு வெவ்வேறு இடங்களில் பரவி விட்டது என பொருள்.
ஸ்டேஜ் 3 வரை கேன்சர் செல்கள் லிம்ப் நோட்கள் வரை செல்வதில்லை.
எலும்பு புற்றுநோயின் நான்காவது ஸ்டேஜ், ஹை க்ரேட் கேன்சர் அல்லது அட்வான்ஸ் கேன்சர் என அழைக்கப்படுகின்றது.
நான்காவது ஸ்டேஜில் கேன்சர் செல்கள், நுரையீரல், லிம்ப் நோட்ஸ் அல்லது உடலின் மற்ற பாகங்களை பாதித்துவிடுகிறது.