கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில மருத்துவ குணங்கள் கொண்ட இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் அதிகமாக உள்ள துளசி இலைகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கின்றன. இதில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள் கொண்ட வேப்பிலை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது
தினமும் புதினா இலைகளை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சமையலில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டால் கெட்ட கொழுப்பு வேகமாக குறைக்கப்படும். இது உடலுக்கு இன்னும் பலவித நன்மைகளையும் அளிக்கின்றது.
சீந்தில் எனப்படும் கிலோய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.