சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் டீ: குடிச்சே குறைக்கலாம்

';

நீரிழிவு நோயாளிகள்

கடந்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில மூலிகை தேநீர் வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

துளசி டீ

துளசி டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. துளசி இலைகள் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதை தேநீராக செய்து உட்கொள்வது வேகமாக சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

';

கிரீன் டீ

கிரீன் டீ நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான டீகளில் ஒன்றாகும். க்ரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

ஓம தேநீர்

ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஓம டீ தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் நான்கில் ஒரு பங்கு ஓமத்தை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சிறிது ஆறிய பின் வடிகட்டி குடிக்கவும்.

';

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை நீரிழிவு கட்டுப்பாட்டில் பெரிய அளவில் உதவும் ஒரு மசாலா ஆகும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் அளவுகளை சமநிலையில் வைக்கவும் உதவுகின்றது.

';

வெந்தய தேநீர்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க வெந்தய டீ சிறந்த வழியாக இருக்கும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story