மஞ்சளை விட சிவப்பு தான் பெஸ்ட்! இது செவ்வாழைக்கும் பிற வாழைப்பழங்களுக்குமான ஊட்டச்சத்து போட்டி!

';

செவ்வாழை

சாப்பிட சுவையாக இருக்கும் செவ்வாழை, ஆரோக்கியத்திற்கும் அருமையானது. பிற வாழை ரகங்களைவிட செவ்வாழை ஏன் சிறந்தது? தெரிந்துக் கொள்வோம்...

';

வண்ணமயமான பழங்கள்

உடல் நலனுக்கு அற்புதமான பலன்களைத் தரும் வாழைப்பழங்களில் பல நிறங்களும் ரகங்களும் உண்டு. அதில் செவ்வாழைப்பழத்தில் பலவித மருத்துவ நன்மைகள் உள்ளன

';

செவ்வாழைக்காய்

வாழை, காயாக இருக்கும்போது சமைத்து சாப்பிடலாம், ஆனால் செவ்வாழையை காயாக பயன்படுத்துவதில்லை

';

ஊட்டச்சத்துக்கள்

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், பீட்டா கரோட்டின், தையமின், போலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன

';

கருவுறுதல்

செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டுவந்தால் கருவுறும் தன்மை அதிகரிக்கும். தேனில் ஊற வைத்த வெவ்வாழையை ஆண்கள் காலையிலும், பெண்கள் இரவிலும் சாப்பிடுவது குழந்தை பெறும் தன்மையை அதிகரிக்கும்

';

கண் ஆரோக்கியம்

இதிலுள்ள வைட்டமின் ஏ, கண்களின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. பார்வைக் கோளாறு பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து பார்வைத் திறனை மேம்படுத்தும் வைட்டமின் ஏ, மாலைக்கண் நோய் பாதிப்பிலிருந்து நிவாரணத்தைக் கொடுக்கும்

';

இரத்த விருத்தி

இரத்த அணுக்கள் மேம்பாட்டுக்குத் தேவையான இரும்பு சத்து, வைட்டமின் பி, உயர்தர பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த உற்பத்திக்கு செவ்வாழையை தொடர்ந்து உண்பது நல்லது. இரத்த சோகை, இரத்தக் குறைபாடு போன்ற பாதிப்புகளை செவ்வாழை தடுக்கிறது

';

எடை குறைப்பு

நன்றாக பழுத்த பிறகே செவ்வாழையை சாப்பிட வேண்டும்.பிற ரகங்களுடன் ஒப்பிட்டால், செவ்வாழையில் கலோரிகள் குறைவாக உள்ளது, அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு செவ்வாழை நல்லது

';

பொறுப்புத் துறப்பு

: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story