நல்ல உயரமான உடல் வாகு சிறந்த ஆளுமையின் அடையாளம். இந்நிலையில், உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க, சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளும், சில உடற்பயிற்சிகளும் அவசியம்.
சிறு வயதிலிருந்தே ஊட்டச்சத்து அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவை வழங்குவது அவசியம்.
உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த உணவுகளானபருப்பு வகைகள், மீன், முட்டை, பால், சீஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
எலும்புகள் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பாலாடைக்கட்டி, பச்சை இலைக் காய்கறிகள், ராகி போன்றவறை தவறாமல் கொடுக்கவும்.
வைட்டமின் டி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு போன்ற உணவுகள் உதவும். சூரிய ஒளி உடல் படுவதும் அவசியம்.
குதித்தல், ஓடுதல், யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகள் மூலம் உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கலாம்.
தூக்கத்தின் போது உடல் வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. எனவே, குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் முக்கியம்.
மன அழுத்தம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லாத மகிழ்ச்சியான சூழலை உருவாக்குங்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.