அடம் பிடிக்கும் சுகர் லெவலை அடக்கி வைக்க உதவும் டயட் டிப்ஸ்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

Sripriya Sambathkumar
Oct 22,2024
';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பாகற்காய்

பாகற்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகைகளில் உதவுகின்றன. தினமும் காலையில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

வெந்தயம்

நார்ச்சத்து அதிகமாக உள்ள வெந்தய நீர் சுகர் நோயாளிகளுக்கு ஏற்றது. தினமும் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பது சுகர் அளவை கட்டுக்குள் வைக்கும்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காய் சுகர் லெவலை கட்டுக்குள் வைப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.

';

இலவங்கப்பட்டை

பலவித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்களும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story