கல்லீரல்

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம்.

';

கல்லீரல்

உடலில் உள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்குவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

கல்லீரல்

கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது.

';

கல்லீரல் நோய்

கல்லீரலில் நோய் உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

';

கல்லீரல்

கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் தோன்றும் பல வகையான அறிகுறிகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

';

வாந்தி - குமட்டல்

கல்லீரல் பாதிப்பினால், உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாத போது, வாந்தி குமட்டல் உணர்வை ஏற்படுத்துகிறது.

';

மஞ்சள் நிறம்

கல்லீரல் சரியாக செயல்படாதபோது, ​​​​கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை. எனவே, பிலிரூபின் அளவு அதிகரித்து, தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் ஏற்படும்.

';

பாதங்களின் வீக்கம்

கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.

';

சிறுநீர்

சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.

';

அதிக சோர்வு

அடிக்கடி சோர்வாக இருப்பது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.

';

VIEW ALL

Read Next Story