சிறுநீரக பாதிப்பை எச்சரிக்கும் ‘சில’ ஆபத்தான அறிகுறிகள்!

';

சிறுநீரக பாதிப்பு

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு ஆரம்ப கால அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

கழிவுகள்

சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, ​​இரத்தத்தில் கழிவுகள் அதிகமாக சேர்வதால் உடல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.

';

எடிமா

பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகம் கழிவுகளை சரியாக வடிகட்டவில்லை என்பதை காட்டுகிறது

';

சிறுநீர்

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும்.

';

சிறுநீர் கசிவு

தூங்கும் போது சிறுநீர் கசிவு இருந்தால், அது சிறுநீரகப் பாதிப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி. சிறுநீர்ப்பை சரியாகச் செயல்படாத போது, நீங்கள் தூங்கும் போதும் சிறுநீர் கழிக்கலாம்.

';

தூக்கமின்மை

உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story