குளிர்காலத்தில் மாதுளம்பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் இரட்டிப்பாகும்! அழகு மும்மடங்காகும்...

';

"சொர்க்கத்தின் பழம்"

மாதுளையின் மருத்துவ குணங்கள் பிரசித்தி பெற்றது. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனதிற்கும் நாவிற்கும் இனிமையை கொடுக்கும் மாதுளம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் அதை சூப்பர்ஃப்ரூட் என்று சொல்ல வைக்கிறது

';

சூப்பர்ஃப்ரூட்

வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் மாதுளையில் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கின்றன

';

நோயெதிர்ப்பு சக்தி

மாதுளம்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது தவிர, செரிமானத்தை மேம்படுத்தி வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

';

வயிற்று பிரச்சனைகள்

செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் மாதுளை உதவும். மாதுளையில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தும், ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன.

';

இதய ஆரோக்கியம்

மாதுளம்பழத்தில், கணிசமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாலிபினால்கள் இருப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்ட மாதுளை, புற்றுநோயைத் தடுப்பதில் கணிசமான பங்காற்றுவதை மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

';

செரிமான ஆரோக்கியம்

நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை அதிக அளவில் கொண்ட மாதுளையை தொடர்ந்து உண்டு வந்தால், செரிமான ஆரோக்கியம் மேம்படும்

';

புத்துணர்ச்சி

சருமப் பராமரிப்பிலும் மாதுளை சிறப்பான பங்களிக்கிறது. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, வயதாவதை தள்ளிப்போடும் பண்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக அழகையும் அதிகரிக்கும் பழம் இது.

';

தோல் மீளுருவாக்கம்

மாதுளையில் உள்ள எலாஜிக் அமிலம் மற்றும் புனிகலஜின் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், தோல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story