';

மருக்கள்

சருமத்தில் ஆங்காங்கே பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.

';

மருக்கள் உருவாகும் முறை

கொலாஜனும் இரத்த நாளங்களும் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, தோன்றும்.

';

வீட்டு வைத்தியம்

பணம் அதிகம் செலவழித்து அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம். ஆனால், செலவில்லாமல், வீட்டில் நாம் தினம் உபயோகிக்கும் பொருளை வைத்தே கூட மருக்களை நீக்கி விடலாம்

';

பூண்டு

பூண்டை உரித்து சாறெடுத்து மருவில் தடவி வந்தால், சில நாட்களில் மருக்கள் முழுவதுமாக வேரிலிருந்து காய்ந்து விழுந்து விடும்.

';

வெங்காயம்

மருக்களை நீக்க வெங்காயத்தையும் பூண்டுடன் கலந்து சாற்றை எடுத்து மருக்கள் மீது தடவி வந்தால், மருக்கள் நீங்கும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை மருக்கள் மீது தடவி வந்தால் மருக்கள் தனாகவே உலர்ந்து மருக்கள் தாங்களாகவே விழும்.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story