பாகற்காய்

பாகற்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது. நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

Vidya Gopalakrishnan
Apr 06,2023
';

கலோரி அளவு

100 கிராம் பாக்ற்காயில் 17 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனால் எடை இழக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம் ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

';

இன்சுலின்

நாம் நிறைய பாகற்காயைச் சாப்பிட்டால், நம் உடலில் நிறைய இன்சுலின் சுரக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

';

இரத்த ஓட்டம்

அளவுக்கு அதிகமாக பாகற்காயைச் சாப்பிடுவதால் இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. மார்பில் இரத்தக் கட்டிகள் உருவாகி மாரடைப்பு ஏற்படலாம்.

';

மாதவிடாய்

பாகற்காய் ஜூஸை அதிகமாக குடிப்பதால் மாதவிடாய் உதிரப்போக்கு கணிசமாக அதிகரிக்கிறது.

';

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பாகற்காயை அதிகம் எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

';

பாகற்காய் ஜூஸ்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தினசரி பாகற்காய் ஜூஸ் குடிப்பது கல்லீரலை பாதிக்கக்கூடும்.

';

கல்லீரல்

பாகற்காயில் உள்ள லெக்டின் எனும் புரதம் கல்லீரலில் நொதிகளின் அளவை அதிகரிக்கிறது. இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம். கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸை தவிர்த்திடுங்கள்.

';

நீரிழிவு

நீரிழிவு நோயாகளுக்கு வரப்பிரசாதமாக உள்ள பாகற்காய், இரத்த சர்க்கரையின் அளவு மிகவும் குறைக்கும் திறன் கொண்டது. எனவே இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

வாந்தி

பாகற்காயை அதிகம் உட்கொள்வதால், தலை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுபிள்ளைகளுக்கும் அதிகமாக பாகற்காய் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

';

வயிற்று வலி

பாகற்காயை அதிகம் எடுத்துக் கொள்வதால் வயிற்று வலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் நல்லது.

';

சரியான அளவு

பாகற்காயில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அளவோடு சாப்பிட்டால் பாகற்காயின் நன்மைகளை முழுவதுமாக பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story