பால், யோகார்ட் மற்றும் சீஸ் உணவுகளில் மூளையின் திசு, நரம்பியக் கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சிக்கு உதவும், புரதம் மற்றும் விட்டமின் பி போன்றவை அதிகம் உள்ளன.
பீன்ஸ் பருப்புகளில் புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்களுடன் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.
வாதுமை கொட்டையில் (Walnut) ஆல்பா-லினோலெனிக் அமிலம், பாலிபினோலிக் கலவைகள் நினைவாற்றலை பெருக்கி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
பேரிச்சம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உங்கள் மூளை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிப்பதன் மூலம் மூளை வளர்ச்சிக்கு பாதாம் உதவுகிறது. இரவில் தண்ணீரில் ஊற வைத்த பாதாமை காலையின் கொடுப்பது சிறந்தது.
பாலி-சாசுரேடட் மற்றும் மோனோ-சாசுரேடட் கொழுப்புகள் உள்ள முந்திரி பருப்புகள் நினைவாற்றலை அள்ளி வழங்கும். எனவே, குழந்தைக்கு தவறாமல் கொடுக்கவும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். இதன் மூளை வளர்ச்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்ப்டாமல் இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.