முதுகெலும்பு

நேர்த்தியான உடல் வாகிற்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் இன்றியமையாதது முதுகெலும்பு.

';

முதுகு வலி

கணினியின் முன்பே அமர்ந்து பணிபுரிந்து வருபவர்கள், முதுகு வலி மற்றும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்க்கொள்கின்றனர்.

';

தசைகள்

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது, தசைகளுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. ஓய்வு கிடைக்காத தசைகள், அதன் பாரத்தை முதுகெலும்பில் இறக்கி வைக்கும்.

';

தண்ணீர்

உடலை நீரற்ற நிலையில் வைத்திருந்தால் தண்ணீர் எல்லா உறுப்புகளுக்கும் சீராக சென்று அடையாது. தசைகளுக்கு போதிய நீர் கிடைக்காவிட்டால், அது முதுகெலும்பை பாதிக்கிறது.

';

அலைபேசி

அலைபேசி பயன்பாட்டை பொருத்தவரையில், நாம் எவ்வளவு குனித்து அலை பேசியை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது கழுத்து நம் உடலின் எடையை தாங்கும்.

';


நாம் 40 டிகிரி தலையை குனிந்து அலைபேசி பயன்படுத்தினால், நம் கழுத்தின் மீது 40 பவுண்ட் சுமை ஏறும். அதனால், தலையின் கோணத்தை 0 டிகிரியாக வைத்து, தலையை நிமிர்த்தி அலைபேசியை பயன்படுவது சிறந்த முறை.

';


முதுகெலும்பை வலுப்படுத்த விரும்பினால், உடற்பயிற்சி செய்வதோடு, வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

';

கீரை

கீரை மற்றும் முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் அனைத்து உடல் மூட்டுகளுக்கான சிறந்த மருந்து உடலின் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

மீன் உணவு

கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது.

';

ஒமேகா 3

மீன் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கப்பதோடு திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

';

நட்ஸ்

உணவில் பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும். பாதாமில் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story