அளவிற்கு அதிகமான வைட்டமின் சி மாத்திரைகள்... எலும்புகள் - சிறுநீரகத்தை பாதிக்கும்!

Vidya Gopalakrishnan
Nov 06,2023
';

விட்டமின் சி

உணவில் மூலம் அதிக அளவு விட்டமின் சி உட்கொள்வதால், பாதிப்பு ஏதும் இருக்காது ஆனால், மாத்திரை வடிவில் அதிகப்படியான வைட்டமின்-சி எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

';

சிறுநீரக கல்

அதிகப்படியான வைட்டமின்-சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் வைட்டமின்-சியை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

';

எலும்பு

உடலில் அதிகப்படியான வைட்டமின்-சி அளவுகள் அசாதாரண எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்தும். மூட்டுகளில் அசாதாரணமாக வளரும் எலும்புகள் காரணமாக வலி உண்டாகும்

';

அஜீரணம்

வைட்டமின்-சி மாத்திரை வடிவில்அதிகமாக உட்கொள்வதன் காரணமாக, அஜீரணம், வாந்தி, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.

';

ஊட்டச்சத்து

வைட்டமின்-சி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் தாமிரத்தின் அளவு குறையலாம்.

';

விட்டமின் தேவை

மித மிஞ்சிய அளவிற்கு விட்டமின் சி அதிகரிப்பதற்கு, சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள், சிரப்புகள் தான் முக்கிய காரணம். எனவே, மருத்துவரை அணுகி, உங்களுக்கு எந்த அளவிற்கு விட்டமின் தேவை என்பதை அறிந்து கொள்ளவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story