மன அழுத்தம் பதற்றம், கோபம் ஆகியவற்றுக்கு செரோடோனின் குறைபாடும் இதற்கு ஒரு காரணம் . இதை தவிர்க்க டிரிப்டோபான் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இது உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
துரித கதியிலான வாழ்க்கையில் மன அழுத்தம், பதற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதோடு சட்டென்று கோபம் கொள்ளும் பழக்கமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
செரோடோனின் ஒரு வேதிப்பொருள். மனநிலை, தூக்கம், செரிமானம், எலும்பு ஆரோக்கியம், இரத்த நாளங்கள் மற்றும் பாலியல் ஆசை போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. உடலில் 5-HTP அளவை அதிகரிக்க டிரிப்டோபானைப் பயன்படுத்துகின்றனர். வாழைப்பழம் சிறந்த தூக்கத்தையும் கொடுக்கிறது
பாதாமில் மெக்னீசியம், செரோடோனின், ஆகியவற்றுடன் வைட்டமின் பி2 மற்றும் ஈ சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
அன்னாசிப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது, அதே போல் டிரிப்டோபனும் இதில் அதிகம் உள்ளது, இது செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரதமும் உள்ளது.
சோயா பொருட்களிலும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. இது சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதே போல் சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.