நலம் காக்கும் நன் உணவு சத்குரு சொன்ன ஆரோக்கியத்தின் முக்கிய நன்மைகள் !!
பொதுவாக அனைவரும் துரித உணவிற்கு மாறிவிட்டனர். அதனால் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் தவிர்த்து வருகிறோம் - சத்குரு
அரிசி போன்ற உணவு சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு வரும்.
தானியங்கள் முக்கிய உணவு வகைகளாக உள்ளன. மற்ற உணவு வகைகள் அவற்றின் துணை உணவுகளாக உள்ளன.
தானியங்களில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுச் சத்து போன்ற உடலுக்குத் தேவையான அத்தனை சரிவிகித ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றைத் தினமும் சாப்பிடுவதால் எந்த நோயும் நெருங்காது.
பழங்கள் உண்பதால் ஜீரணம் மற்றும் உடல் செரிமானம் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்க முடிகிறது.
பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம், மாதுளம் பழம், சப்போட்டா மற்றும் கொய்யாப் பழம் போன்றவை ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. உலர் பழங்களும் மிக அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.