பழங்களில் மிகச்சிறந்த பழம் என்ற பெருமை பெற்ற கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வருந்ததக்க விஷயம்.
கொய்யாப்பழம் எளிதில் கிடைக்கக்கூடியது என்பதோடு, எண்ணிலடங்காத ஆரோக்கிய நலன்களை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
கொய்யாப்பழம் கிளைசமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், நீரிழிவு நோயாளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
குறைந்த கலோரி கொண்ட கொய்யா, வளர்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6 கொய்யாவில் உள்ளது.
நார்சத்து நிறைந்த கொய்யாப்பழம் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
வைட்டமின் ஏ சத்து நிறைந்த கொய்யா கண் பார்வையை கூர்மையாக்கி, கண்புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.
சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக தோற்றமளிக்க உங்கள் டயட்டில் கொய்யாப்பழம் அவசியம் இருக்கட்டும்.
கொய்யாவில் உள்ள விட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நார் சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கலுக்கான தீர்வைக் கொடுப்பதோடு பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.