மாங்காய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தயிர்சாதத்துடன் மாங்காய் ஊறுகாய் சாப்பிட பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன... !
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாங்காய், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ப்ரீ-பயோடிக் பண்புகள் நிறைந்த மாங்காய், குடல் ஆரோக்கியத்திற்கான நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
கொலாஜன் உற்பத்திக்கு உதவும் மாங்காய், முதுமையை தடுத்து சருமத்தை இளமையாக வைக்கிறது.
வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி, வாய்ப்புத்துணர்ச்சிக்கு உதவுகிறது.
வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாங்காய், கண்பார்வையை மேம்படுத்தி கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மாங்காய் பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)