காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது வேகமாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும். இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவும்.
சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உங்களை சுறுசுறுப்பாக வைப்பதோடு, நீண்ட நேரத்திற்கு முழுமையான உணர்வை அளித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
இஞ்சி, புதினா, இலவங்கப்பட்டை போன்றவற்றை கொண்டு தயார் செய்யப்படும் மூலிகை தேநீர் சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இவை செரிமானத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றன.
ஓம நீர் செரிமானம் மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகின்றது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் ஓம நீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது,
வெள்ளரி நீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு வயிற்றை நிரம்பச் செய்து அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையையும் குறைக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும். இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.