சுகர் லெவலை சிம்பிளா குறைக்க உதவும் தினசரி உணவுகள்

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை இயற்கையான வழிகளில் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

பாகற்காய்

பாகற்காயில் இரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் பண்புகளைக் கொண்ட சரண்டைன் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்ற சேர்மங்கள் அதிகமாக உள்ளன. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ளலாம்.

';

வெந்தயம்

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. வெந்தயம் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது சுகர் நோயாளிகளுக்கு ஏற்றது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் இன்சுலின் விளைவுகளை மேம்படுத்தும் பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன, இது உடல் எடையையும் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. சுகர் லெவலை குறைக்க தினமும் நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.

';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ஆளிவிதைகள்

நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளவர்கள் தினமும் ஆளிவிதைகளை உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் நிரம்பியுள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story