இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாகி பல பிரச்சனைகளுக்கு வழி வகிக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் பல அபாயகராம நோய்களும் வருகின்றன.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய்களின் அபாயமும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனையால், உடலில் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதன் காரணமாக சருமத்தின் நிறம் மஞ்சளாக மாறத் தொடங்குகிறது.
தவறான உணவு முறை காரணமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது
போதுமான உடல் உழைப்பு இல்லாமையும் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கான ஒரு காரணமாகும்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதன் தொடர்ச்சியாக கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது.
கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.