நுரையீரல் மற்றும் நமது சுவாச அமைப்புகளை மட்டுமல்ல, நமது அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது
நாம் நினைப்பதை விட அதிக பிரச்சனையை ஏற்படுத்தும் காற்றின் தரம் மோசமானால், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. ஆனால் இதுபற்றி பலருக்கும் தெரிவதில்லை
சிறுநீரகத்திற்கும் காற்றின் தரத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். அசுத்தமான காற்றை சுவாசித்தால், சிறுநீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் மேலும் வீக்கம் ஏற்படுகிறது என்றும் அறிவியல் கூறுகிறது.
உடலில் அதிகமானால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும், இது சிறுநீரக நோய்களை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மெதுவான செயல்முறை என்றாலும் பெரும்பாலும் மறைமுகமாகவே இருக்கும் என்பதால் அதிக கவனம் பெறுவதில்லை
மாசு காற்றில் உள்ள துகள்களும் தூசுக்களும், மூச்சுக்குழாய்கள் வழியாகச் சென்று சுவாச அமைப்புக்குள் நுழைவதால் சுவாச திசுக்கள் சேதமடைந்து வீக்கம் ஏற்படுகிறது
சுவாச திசுக்கள் சேதமடைவதாலும், வீங்குவதாலும் சுவாசக்குழாய் தொடர்பான நோய்களைத் தூண்டலாம் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நிலைமைகளை மோசமாக்கும்.
காற்று மாசுபாடு இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு அல்லது தமனிகளின் கடினத்தன்மை சிறுநீரகத்தின் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம்.
சில காற்று மாசுபடுத்திகள் வகை 2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. காலப்போக்கில் சிறுநீரகத்தின் சிறிய இரத்த நாளங்களை படிப்படியாக சேதப்படுத்தும் நீரிழிவு நோயின் போக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணமாக அமைகிறது.
தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.