இந்திய சமையல்களில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக வெங்காயம் இருக்கிறது. அப்படிப்பட்ட வெங்காயத்தில் கருப்பு கலர் திட்டுகளை பார்த்திருப்போம்
வெங்காயத்தில் கருப்பு கலர் திட்டு இருந்தால் அதை சாப்பிடலாமா பாதுகாப்பனதாக என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
வெங்காயத்தில் கருப்பு கலர் திட்டு ஏற்படுவது சாதாரணமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவகையான பூஞ்சையால் இப்படி வெங்காயத்தில் கருப்பு கலர் ஏற்படுகிறது
அஸ்பெர்கிலஸ் நைஞர் என்ற பூஞ்சை காரணமாகவே இதுபோன்ற கருப்பு கலர் வெங்காயத்தில் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
இது சிறிய அளவில் இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், வெங்காயம் முழுவதும் இந்த கருப்பு கலர் திட்டு இருந்தால் சாப்பிடுவதை தவிர்க்கவும்
கருப்பு கலர் இருக்கும் வெங்காயத்தை அதிகளவு சாப்பிட்டால், ஆக்ராடாக்சின் ஏ எனும் நச்சை உற்பத்தி செய்யக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நச்சை உற்பத்தி சிறுநீரகம், கல்லீரலுக்கு ஆபத்தாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். என்னதான் அந்த வெங்காயத்தை கழுவினால் நச்சு முழுமையாக அழியாது
எனவே, வெங்காயத்தில் கருப்பு கலர் திட்டு வெளிப்பக்கம் இருந்தால், அதை கழுவி உடனடியாக சமைக்கவும். கருப்பு திட்டு வெங்காயத்தின் உள்பக்கம் வரை சென்று, அழுகி இருந்தால் தவிர்க்கவும்