ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை உணவில் சேர்க்க வேண்டும்

Malathi Tamilselvan
May 26,2023
';

பெர்ரிகள்

பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பவை

';

பப்பாளி

பப்பெய்ன் எனப்படும் செரிமான நொதியைக் கொண்டுள்ள பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது, நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை பயக்கும் பழம் பப்பாளி

';

கிவி

பல வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

';

தர்பூசணி

வைட்டமின்கள் ஏ & சி மற்றும் லைகோபீன் என பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தர்பூசணியில், நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது.

';

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட மாதுளை, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது

';

சுவையான மாம்பழங்கள்

வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்தவை

';

வாழைப்பழங்கள்

வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி மற்றும் அதிக பொட்டாசியம் கொண்ட வாழைப்பழங்கள், நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது

';

ஆப்பிள்கள்

நார்ச்சத்துக்கான நல்ல மூலமான ஆப்பிள், குவெர்செடின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது

';

அன்னாசிப்பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ள அன்னாசியில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு ஆகியவை கணிசமான அளவு இருக்கிறது

';

VIEW ALL

Read Next Story